அடக்கடவுளே…! கட்டுப்பாட்டை இழந்த ஆல்டோ கார்… வானத்தில் பறந்த கறுப்பு உடை அணிந்த நபர்.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடக்கடவுளே…! கட்டுப்பாட்டை இழந்த ஆல்டோ கார்… வானத்தில் பறந்த கறுப்பு உடை அணிந்த நபர்.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி..!!

Published

on

ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் உள்ள குறுகிய சாலையில் அதிவேகமாக வந்த ஆல்டோ கார் கட்டுப்பாட்டை இழந்து கறுப்பு நிற ஆடை அணிந்திருந்த நபர் மீது பயங்கரமாக மோதிய விபத்து நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டுநரின் மதுபோதை அல்லது அசாத்தியமான வேகமே இந்த கோர விபட்டுக்குக் காரணம் எனக் கூறப்படும் நிலையில், சம்பவ இடத்திலேயே அந்த நபர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபகாலமாக அதிகரித்து வரும் இது போன்ற அதிவேக விபத்துகள் சாலைகளில் பயணம் செய்யும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Haryana, Nuh District 🚨⚠️

Disturbing Visuals 🚨

What’s wrong with Alto Driver? DUI?
Speeding Alto lost control on a narrow undivided route, rammed the person with black dress, he is no more….

If this is how people are driving these days, road users at max risk with back… pic.twitter.com/GC2Bk0V74a— Dave (Road Safety: City & Highways) (@motordave2) July 29, 2026

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இத்தகைய ஆபத்தான சம்பவங்கள் சாலைகளில் பயணிக்கிறவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன. ஓட்டுநர்கள் தங்களது பொறுப்பற்ற போக்கைக் கைவிட்டு, சாலை விதிகளை முழுமையாக மதித்து வாகனங்களை இயக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. பாதுகாப்பான பயணம் மட்டுமே விலைமதிப்பற்ற மனித உயிர்களைக் காக்க முடியும் என்பதால், ஓட்டுநர் உரிமம் பெற்ற ஒவ்வொருவரும் மிகுந்த விழிப்புணர்வுடனும் பொறுப்புடனும் வாகனங்களை இயக்க வேண்டியது அவசியமாகும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in