LATEST NEWS
“என் உயிரைக் கொடுங்கள்… குழந்தையைக் காப்பாற்றுங்கள்.. !” தாய் எடுத்த அதிரடி முடிவால் உறைந்துபோன மருத்துவர்கள.. இணையத்தைக் கலங்கவைக்கும் சோக சம்பவம்..!!
தாய்மையின் மகத்துவத்திற்கு இணையானது இந்த உலகில் வேறொன்றுமில்லை என்பதற்கு மார்கபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷா பணியாளர் குண்டு லீலமா அவர்களின் தியாகம் ஒரு கண்ணீர் கதையாக அமைந்துள்ளது. நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு கர்ப்பமடைந்த அவருக்கு இதய கோளாறு இருப்பது தெரியவந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாயைக் காப்பாற்றுவதா அல்லது குழந்தையைக் காப்பாற்றுவதா என்ற இக்கட்டான சூழ்நிலையில், தாயானவள் தன் உயிரை விட குழந்தையின் எதிர்காலமே முக்கியம் என்று கூறி தன் கணவரை சம்மத கடிதத்தில் கையெழுத்திடச் சொன்னார்.
అమ్మ ప్రేమకు సాటి ఈ లోకంలో ఏదీ లేదు
చనిపోతానని తెలిసినా బిడ్డకు జన్మనిచ్చిన అమ్మ
మార్కాపురం జిల్లా అర్ధవీడు మండలం కాకర్ల గ్రామంలో ఆశా కార్యకర్తగా పని చేస్తూ, కుటుంబ ఆర్థిక సమస్యలతో చాలా కాలం తర్వాత 2018లో పెళ్లి చేసుకున్న గుంటు లీలమ్మ (40)
అప్పటి నుంచి ఆమెకు పిల్లలు… pic.twitter.com/8MShusA7yc— Telugu Scribe (@TeluguScribe) July 29, 2026
மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து ஆரோக்கியமான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த போதிலும், உலகை விட்டுச் சென்ற லீலமாவின் மறைவு குடும்பத்தினரையும் அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தான் பெற்றெடுக்கவிருக்கும் முகமறியா குழந்தைக்காக தன் உயிரையே தாரைவார்த்த அந்த அன்னையின் தியாகம் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது. தாய்மையின் எல்லையற்ற அன்பையும் தியாகத்தையும் பறைசாற்றும் இச்சம்பவம் அனைவரின் நெஞ்சங்களையும் உலுக்கியுள்ளது.
