LATEST NEWS
“அடப்பாவமே..! சீரியலைப் பார்த்துக் குடும்பத்தையே கொல்ல முயன்ற பெண்ணா..?!” கணவன் குடும்பத்திற்கே விஷம் வைத்த புதுப்பொண்ணு.. ரகசிய கேமராவால் சிக்கிய திடுக்கிடும் உண்மை..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் ஹிமான்ஷு குப்தா என்பவருக்கும், லேப் டெக்னீசியனான ஜோதி குப்தா என்பவருக்கும் திருமணம் நடந்த சில நாட்களிலேயே கணவர் மற்றும் பெற்றோரின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. தனது தாயார் ரத்த வாந்தி எடுத்ததைக் கண்டு சந்தேகமடைந்த கணவர் சமையலறையில் ரகசிய கேமராவைப் பொருத்தியபோது, மனைவி ஜோதி குப்தா தயாரிக்கும் தேநீரில் சந்தேகத்திற்கிடமான நச்சுப் பொருட்களைக் கலப்பது அம்பலமானது. அதைப் பரிசோதித்ததில் அதில் மெதுவான விஷம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டதோடு, தன் மனைவி ‘கிரைம் பெட்ரோல்’ தொடரின் தீவிர ரசிகை என்றும் ஹிமான்ஷு காவல்துறையினரிடம் தெரிவித்தார்.
पीड़ित पति को सुनिए pic.twitter.com/AT6AZKABnE— ShivRaj Yaduvanshi (@shivaxind) July 29, 2026
இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, மனைவி ஜோதி குப்தா தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது வரதட்சணை வழக்கு தொடர்ந்த நிலையில், காவல்துறையினர் இரு தரப்பு மீதும் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான குறுகிய காலத்தில் மனைவியே கணவர் குடும்பத்தினருக்கு உணவில் விஷம் வைத்ததாகக் கூறப்படும் இந்த திடுக்கிடும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
