“என்கிட்ட இப்போ காசு இல்லைடா..!” அம்மா சொன்ன ஒற்றை வார்த்தை.. தற்கொலைக்கு தண்டவாளத்தில் ஓடிய மகன்.. அடுத்த நொடியே தாய்க்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை பிழியும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“என்கிட்ட இப்போ காசு இல்லைடா..!” அம்மா சொன்ன ஒற்றை வார்த்தை.. தற்கொலைக்கு தண்டவாளத்தில் ஓடிய மகன்.. அடுத்த நொடியே தாய்க்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை பிழியும் சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பதோஹி பகுதியில், மகன் கேட்ட வெறும் ரூ.100 பணத்தைத் தர முடியாததால் ஏற்பட்ட விரக்தியில், ரயில் தண்டவாளத்தை நோக்கி ஓடிய மகனைக் காப்பாற்ற முயன்ற தாய் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் ஐபோன் கேட்டு அடம் பிடித்த 19 வயது மகனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்த அடுத்த நாளே இந்த விபரீதமும் நடந்துள்ளது. பணமில்லாததால் தாய் மறுத்த கோபத்தில் அவனது மகன் தற்கொலை செய்ய ரயில் தண்டவாளத்தை நோக்கி ஓடியுள்ளான். பெற்ற மனம் பொறுக்காத அந்தத் தாய், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மகனைத் தடுத்து நிறுத்த பின்னாடியே ஓடியுள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக, மகனை மீட்கும் போராட்டத்தில் அந்தத் தாய் வேகமாக வந்த ரயிலின் சக்கரங்களுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்; படுகாயமடைந்த அவரது மகன் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான். உயிரிழந்த அந்தத் தாயின் பெயர் சிவகுமாரி தேவி என்பதும், அவர் சுகாதாரத் துறையில் அரசு ஊழியராகப் பணியாற்றி வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது; அவரது கணவர் பெயர் ராம்சாகர் ராஜ்பர் ஆகும். வெறும் நூறு ரூபாய் பணத்திற்காகத் தொடங்கி, ஒரு தாயின் பாசப் போராட்டத்தையும், அவரது உயிரையும் பறித்துள்ள இந்தத் துயரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதி மக்களையும் கண்ணீரில் மூழ்கடித்துள்ளதோடு, சமூக வலைத்தளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in