“அடப்பாவி மனுஷனாடா நீ..! கையில் மண்ணு இருந்த ஒரே காரணத்துக்காக… அண்ணியை வெட்டிச் சாய்த்த கொடூரக் கொழுந்தன்..!!” – cinefeeds
Connect with us

CRIME

“அடப்பாவி மனுஷனாடா நீ..! கையில் மண்ணு இருந்த ஒரே காரணத்துக்காக… அண்ணியை வெட்டிச் சாய்த்த கொடூரக் கொழுந்தன்..!!”

Published

on

பீகார் மாநிலம் ஜஹானாபாத் மாவட்டத்தில் உள்ள சைன்புரா கிராமத்தில், உணவைப் பரிமாறும் போது ஏற்பட்ட மிகச்சிறிய தகராறில் கொழுந்தன் தன் அண்ணியைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண் அன்ஷு குமாரி என்பவராவார். இவருக்கு தர்மேந்திர குமார் என்பவருடன் திருமணமாகிச் சுமார் ஒரு வருடமே ஆகிறது.

புதன்கிழமை காலையில் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் நாற்று நடுவதற்காக வயலுக்குச் சென்றிருந்தனர். அந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த கொழுந்தன் குணால் குமார், அண்ணி அன்ஷு குமாரியிடம் உணவு கேட்டுள்ளார். அன்ஷு குமாரி உணவைப் பரிமாறிய போது, அவரது கைகளில் சிறிது மண் ஒட்டியிருந்தது. இதைப் பார்த்து ஆத்திரமடைந்த குணால் குமாருக்கும் அண்ணிக்கும் இடையே வாக்குவாதம் தொடங்கியது. தகராறு முற்றியதில் அன்ஷுவைக் கீழே தள்ளிய குணால், வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தால் அவரை வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த பரஸ்பிகா காவல் நிலையப் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அன்ஷு குமாரியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை வழக்கில் குற்றவாளியான கொழுந்தன் குணால் குமாரை போலீசார் உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in