பெரும் பரபரப்பு..! விபத்தில் சிக்கிய முதலமைச்சர் விஜயின் கான்வாய் வாகனம்.. இரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பெரும் பரபரப்பு..! விபத்தில் சிக்கிய முதலமைச்சர் விஜயின் கான்வாய் வாகனம்.. இரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

Published

on

சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துவிட்டு, தமிழக முதலமைச்சர் விஜய் தனது இல்லத்திற்குத் திரும்பியபோது அவரது ‘TANGO’ பாதுகாப்பு கான்வாய் வாகனங்கள் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கின. இந்தச் சம்பவம் சென்னை திருவான்மியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக சிக்னல் சந்திப்புக்கு அருகே அரங்கேறியுள்ளது.

முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள் இடதுபுறப் பாதையில் வழக்கமான வேகத்தில் சென்று கொண்டிருந்தன. அப்போது அதே சாலையில் சென்ற அடையாளம் தெரியாத ஒரு தனியார் கார், திடீரென வலதுபுறப் பாதைக்கு மாறியுள்ளது. இதனால் முன்னால் சென்ற வாகனங்கள் விபத்தைத் தவிர்க்கும் பொருட்டு, சாலையில் தங்களின் வாகனங்களை உடனடியாக நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.

Advertisement

இந்த திடீர் திருப்பத்தின் காரணமாக, கான்வாய் வரிசையில் வந்த அடையார் துணை ஆணையரின் கார் உடனடியாக ‘சடன் பிரேக்’ அடித்து நின்றது. ஆனால், அதற்குப் பின்னால் வந்து கொண்டிருந்த டெம்போ டிராவலர் வாகனம், ஓட்டுநர் பிரேக் பிடித்தும் கட்டுப்பாட்டை இழந்து துணை ஆணையரின் காரின் பின்புறம் பலமாக மோதியது. இந்த அடுத்தடுத்த மோதலில் கான்வாயில் இருந்த இரண்டு வாகனங்களும் பலத்த சேதமடைந்தன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in