LATEST NEWS
“கஷ்டம்னா கூப்பிடாமலே ஓடிவந்த காலம் போயி… பக்கத்து வீட்ல யாரு இருக்காங்கன்னு கூட தெரியாத காலம் வந்துடுச்சு…” பழைய ‘கிராமத்து தெருக்கள்’ கெத்தா..? இல்லை நவீன ‘ஹை-ரைஸ் ஃபிளாட்ஸ்’ கெத்தா..? இணையத்தை சூடேற்றிய வைரல் வீடியோ…!!
இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் நல்ல வீடு, தூய்மையான சுற்றுப்புறம், பூங்கா, உடற்பயிற்சிக் கூடம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் நிறைந்த நவீன அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழவே விரும்புகின்றனர். இதன்காரணமாக நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்பு கலாச்சாரம் வேகமாக அதிகரித்து வருகிறது. வெளியில் இருந்து பார்க்கும்போது நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஒன்றாக வாழும் இந்த கட்டிடங்கள் மிகவும் வசதியான நவீன வாழ்க்கையின் அடையாளமாகத் தோன்றுகின்றன. ஆனால், வீடுகள் மிக அருகில் அமைந்திருந்தாலும், அதில் வாழும் மக்களிடையே உறவுகளும் அவ்வளவு நெருக்கமாக இருக்கிறதா என்ற கேள்வியை அபய் என்பவர் வெளியிட்ட வைரல் வீடியோ ஒன்று எழுப்பியுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பேசியுள்ள அபய், அடுக்குமாடி குடியிருப்புகளின் வாழ்க்கை முறைக்கும் பழமையான வீடுகள் அமைந்த தெருக்கள் அல்லது காலனிகளின் வாழ்க்கை முறைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். உயரமான கட்டிடங்கள் மற்றும் ஆடம்பர வசதிகள் வெளியில் பார்க்க பிரம்மாண்டமாக இருந்தாலும், அதற்குள் வாழ்பவர்களின் உறவுகளில் பெரிய இடைவெளி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். ஒரே தளத்தில் வசிக்கும் அண்டை வீட்டாரைப் பற்றியோ அல்லது அவர்களின் அன்றாட வாழ்க்கையைப் பற்றியோ கூட பலர் அறியாமல் முற்றிலும் தங்களுக்குள்ளேயே மூழ்கி வாழும் சூழலே இங்கு நிலவுகிறது.
https://www.instagram.com/reel/DcvMkKHREDq/?utm_source=ig_web_button_share_sheet
இதற்கு மாறாக, பழைய தெருக்களிலும் காலனிகளிலும் வாழ்ந்த மக்கள் அண்டை வீட்டாருடன் வெறும் பக்கத்து வீட்டுக்காரர்களாக மட்டும் இல்லாமல், ஒரு குடும்ப உறுப்பினரைப் போல நெருங்கிப் பழகினர். யாரேனும் ஒருவருக்கு கஷ்டம் என்றால் மற்றவர்கள் அழைக்காமலேயே ஓடிவந்து உதவி செய்வதும், மாலையில் வீட்டின் வாசலில் அமர்ந்து உரையாடுவதும் வழக்கமாக இருந்தது. ஆனால், தற்கால அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கையில் பணிச்சுமை மற்றும் தனிப்பட்ட பொறுப்புகளுக்கு இடையே மக்களின் வாழ்க்கை சுருங்கிவிட்டதால், அண்டை வீட்டாருடன் பேசக்கூட நேரம் இல்லாத நிலை உருவாகியுள்ளது. ‘சமூகம்’ என்று அழைக்கப்படும் இடங்களில் மனித நேயமும் மனித தொடர்புகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டதாக அவர் தனது பார்வையை முன்வைத்துள்ளார்.
