LATEST NEWS
“அடேய் புது போனாடா..? மொபைல் பாக்ஸைத் திறந்து பார்த்ததும் விழுந்து விழுந்து சிரிச்ச நண்பர்கள்… உத்தரப் பிரதேச இளைஞரின் அல்டிமேட் ஐடியா… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!”
சில நேரங்களில் அவசரத் தேவையின் போது மனிதர்கள் செய்யும் விசித்திரமான ‘ஜுகாட்’ நம்மைக் கவரத் தவறுவதில்லை. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், மதிய உணவு எடுத்துச் செல்ல டிபன் பாக்ஸ் இல்லாததால், ஸ்டீல் பாத்திரத்தையோ அல்லது பிளாஸ்டிக் டப்பாவையோ தேடாமல், வீட்டில் இருந்த மொபைல் போன் பாக்ஸையே டிபன் பாக்ஸாக மாற்றியுள்ளார். அதற்குள் வீட்டில் சமைத்த காய்கறிச் பொரியலை நிரப்பி அவர் கொண்டு வந்த விசித்திரமான சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வேடிக்கையான சம்பவத்தை ஆனந்த் ராஜ் என்ற இன்ஸ்டாகிராம் பயனர் தனது @anandraj_up50 என்ற கணக்கில் வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். வீடியோவின் தொடக்கத்தில் கேமரா அந்த நபரை நோக்கிச் செல்கிறது, அவருடைய கையில் ஒரு செல்போன் பாக்ஸ் இருக்கிறது. தன் நண்பரிடம் உணவு கொண்டு வர டிபன் பாக்ஸ் இல்லாததால், அதிகம் யோசிக்காமல் இந்த செல்போன் பெட்டியையே லஞ்ச் பாக்ஸாக மாற்றிவிட்டார் என்று வீடியோ எடுப்பவர் நகைச்சுவையாகக் கூறுகிறார்.
https://www.instagram.com/reel/Db8DPUpz5Dw/?utm_source=ig_web_button_share_sheet
அந்த மொபைல் பாக்ஸைத் திறந்ததும், அங்கு நின்றுகொண்டிருந்த அனைவரும் சிரிக்கத் தொடங்கிவிட்டனர். ஏனென்றால், வழக்கமாகப் புதிய போன் அல்லது சார்ஜர் இருக்க வேண்டிய அந்தப் பெட்டிக்குள், மேல் வரை நிரப்பப்பட்ட காய்கறிச் பொரியல் மட்டுமே இருந்தது. அந்த நபர் எந்தவித தயக்கமும் இன்றி அந்தப் பெட்டி முழுவதும் காய்கறியை அடைத்து எடுத்து வந்துள்ளார். சுற்றியிருந்தவர்கள் இதைப் பார்த்து கிண்டல் செய்து சிரித்தாலும், நெட்டிசன்கள் பலரும் இந்தத் ‘தேசி ஜுகாட்’ யோசனையைப் பாராட்டி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
