LATEST NEWS
“அந்த 2 தொகுதியும் என் பொறுப்பு” ஜெயிச்சு காட்டுவேன்.. சீனியர்கள் சொன்னதை கேட்டு கொந்தளித்த உதயநிதி.. அதிமுக கோட்டையை பிடிக்க சபதம்..!!
வரவிருக்கும் இடைத்தேர்தலில் திமுக இரண்டு தொகுதிகளிலும் நேரடியாகக் களம் இறங்குவதற்குப் பின்னணியில் அக்கட்சியின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக வசம் இருந்த தொகுதிகள் என்பதால், ஏதேனும் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட்டு, மற்றொன்றை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கருதியுள்ளனர். ஆனால், இந்த முடிவை ஏற்க மறுத்த உதயநிதி ஸ்டாலின், இரண்டு தொகுதிகளிலும் திமுகவே போட்டியிட வேண்டும் என பிடிவாதமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இரண்டு தொகுதிகளையும் தேர்தல் களத்தில் நின்றே வென்று காட்டுவது தனது பொறுப்பு என கட்சியின் தலைமைக்கு அவர் உறுதியளித்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், இடைத்தேர்தல் நடக்கும் இந்த இரண்டு தொகுதிகளிலும் தனது தீவிர ஆதரவாளர்களுக்கே போட்டியிட வாய்ப்பு பெற்றுத் தந்து, வேட்பாளர் தேர்விலும் தனது முழு செல்வாக்கை அவர் நிரூபித்துள்ளார்.
அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் இடங்களில் நேரடியாகக் களம் கண்டு வெற்றி பெறுவதன் மூலம், கட்சியில் தனது ஆளுமையையும் தேர்தல் வியூகங்களையும் நிரூபிக்க உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதனால், இந்த இடைத்தேர்தல் களம் தற்போதே திமுகவிற்குள் மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
