CRIME
“என் கணவன் முன்பு போல என்னைக் காதலிப்பதில்லை…” டைரியில் எழுதிவைத்து விட்டு.. 2 வயது குழந்தையோடு தம்பதிக்கு நேர்ந்த சோகம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
காதல் குறைந்துவிட்டதாக ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, இரண்டு வயதுப் பெண் குழந்தையைக் கொன்றுவிட்டுத் தம்பதியினர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 26 வயதான சமந்தா மற்றும் 30 வயதான கோபிநாத் ஆகிய இருவரும் கடந்த 2023-ஆம் ஆண்டு காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்குச் சுமார் இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்காகக் கோபிநாத் இரவு பகலாக உழைத்து வந்துள்ளார். அவர் ஒரு ஹோட்டலில் சமையல்காரராகப் பணியாற்றியதுடன், கூடுதல் வருமானத்திற்காகப் பிட்சா டெலிவரி செய்யும் வேலையையும் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், காவல்துறையினர் கைப்பற்றிய சமந்தாவின் வங்காள மொழி டைரியை உறவினர்களின் உதவியுடன் படித்துப் பார்த்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தனது கணவர் முன்பு போலத் தன்னைக் காதலிப்பதில்லை என்றும், தன் மீது அக்கறை காட்டுவதில்லை என்றும், தான் மட்டுமே அவரை இன்னும் காதலிப்பதாகவும் சமந்தா அந்த டைரியில் உருக்கமாக எழுதியுள்ளார். குடும்பச் சுமையையும் பொருளாதாரக் கஷ்டத்தையும் போக்கக் கணவர் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்த நேரத்தில், போதிய புரிதல் இல்லாததால் கணவரின் அன்பு குறைந்துவிட்டதாக நினைத்து சமந்தா எடுத்த இந்த விபரீத முடிவு ஒரு குடும்பத்தையே அழித்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
