LATEST NEWS
“மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை..!” திருடனைப் பிடிச்சு அடிப்பதற்குப் பதிலாக கிராம மக்கள் செய்த காரியத்தை பாருங்க.. முதியவர் சொன்ன ‘அந்த’ ஒரு வார்த்தை.. இணையத்தைக் கலக்கும் நெகழ்ச்சி வீடியோ..!!
கிராமத்தில் சிக்கிய திருடனைத் தண்டிப்பதற்குப் பதிலாக, கிராமவாசிகள் அவனுக்கு அன்பாக ரொட்டியும் காய்கறிகளும் வழங்கி உபசரிப்பதும், பசியாரிய பிறகு அவன் தன் குற்றத்தை நினைத்து பயந்து அழுவதும் இணையத்தில் அனைவரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது; “அவன் பசியால் இறந்துவிட்டால் அதற்கு யார் பதில் சொல்வது, நம்மிடம் மனிதாபிமானம் இன்னும் இருக்கிறது” என்று அந்த ஊர் முதியவர் கூறிய வார்த்தைகள் பார்வையாளர்களின் நெஞ்சை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
Chor hai to kya ek type ka mehman hai . Full khatirdari 😭🤣 pic.twitter.com/lfLLHJyxal— Byomkesh (@byomkesbakshy) August 13, 2026
சாப்பிட்ட பிறகு அவனிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிந்தாலும், ஒரு திருடனைக் கூட விருந்தாளி போல உபசரிக்கும் இந்த மனிதாபிமானச் செயலை நெட்டிசன்கள் ‘அதிதி தேவோ பவ’ என்று வர்ணித்துப் பாராட்டி வருகின்றனர். “கருணை உள்ளம் கொண்ட பீகாருக்கு நல்வரவு” என்று பலரும் சமூக வலைதளங்களில் வியந்து பகிர்ந்து வரும் இந்த சுவாரஸ்யமான மற்றும் வேடிக்கையான நிகழ்வு பலரின் முகத்தில் புன்னங்கையை வரவழைத்துள்ளது.
