LATEST NEWS
யாரு டா இவன்..? போலீஸைக் பார்த்ததும் குளத்தில் குதித்த ரௌடி.. ஆகாயத்தாமரைக்கு நடுவே ஆடிய ‘ஹைட் அண்ட் சீக்’.. இறுதியில் நடந்த மரண மாஸ் ட்விஸ்ட்.. இணையத்தை கலக்கும் வீடியோ..!!
கர்நாடக மாநிலம் சிவமோகாமாவட்டத்தில், மூன்று முறை நீதிமன்றத்தால் பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டும், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த திலீப் என்ற கரியா (19) என்ற ரௌடியைப் போலீஸார் குளத்தில் குதித்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பத்ராவதி பகுதியைச் சேர்ந்த இந்த இளவயது ரௌடி, நீதிமன்ற விசாரணைகளுக்கு ஆஜராகாமல் நீண்ட நாட்களாகப் போலீசாருக்கு அசுரத்தனமாக ஆப்பு வைத்துத் தப்பித்து வந்துள்ளான். இந்நிலையில், அவன் பத்ராவதி புதிய நகர் பகுதியில் நடமாடுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், காவல் துறையினர் அவனைப் பிடிப்பதற்காக அசாத்திய வேகம் காட்டி அந்தப் பகுதியைச் சல்லடை போட்டுத் தேடத் தொடங்கினர்.
போலீசாரைக் கண்டதும் தப்பியோடிய அந்த ரௌடி, அங்கிருந்த ஒரு குளத்தில் இருந்த அசுர ஆகாயத்தாமரை மற்றும் பாசிச் செடிகளுக்கு நடுவே யாருக்கும் தெரியாமல் ரகசியமாகப் பதுங்கிக் கொண்டு ‘ஹைட் அண்ட் சீக்’ நாடகமாடியுள்ளான். நிலைமையைப் புரிந்து கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் காவலர் பிரசன்னா ஆகியோர், தங்களது உயிரைப் பணையம் வைத்துச் சற்றும் யோசிக்காமல் அப்படியே குளத்திற்குள் பாய்ந்து, செடிகளுக்கு அடியில் பதுங்கியிருந்த கரியாவை கையும் களவுமாக வளைத்துப் பிடித்தனர். சினிமா பாணியில் குளத்திற்குள் குதித்து ரௌடியை வேட்டையாடிய போலீசாரின் இந்த மாஸ் ஆபரேஷன் சிசிடிவி மற்றும் புகைப்படங்கள், தற்பொழுது சோசியல் மீடியாக்களில் உலக நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தி அசுர வேகத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
