LATEST NEWS
இதை கவனிச்சீங்களா.? த்ரிஷா காவி, எஸ்ஏசி வெள்ளை, ஷோபா பச்சை.. தேசியக்கொடி நிறத்தில் உடை… முதலமைச்சர் விஜய் கொடியேற்றிய விழாவில் ‘மூவர்ண’ ஆச்சரியம்…!!
தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தனது முதல் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற விஜய், புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முறையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவின் போது, பார்வையாளர்கள் வரிசையின் முன்வரிசையில் அமர்ந்திருந்த பிரபல நடிகை த்ரிஷா காவி நிறத்திலும், முதலமைச்சரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வெள்ளை நிறத்திலும், தாயார் ஷோபா சந்திரசேகர் பச்சை நிறத்திலும் உடைகளை அணிந்து சமூகத்திற்குப் பெருமிதம் சேர்க்கும் வகையில் காட்சியளித்தனர்.
இவர்கள் மூவரும் அருகருகே அமர்ந்திருந்த தோற்றம் அப்படியே நமது முப்பரிமாண தேசியக் கொடியின் வண்ணங்களை நினைவுபடுத்துவதாக அமைந்திருந்தது. இதனை உற்றுநோக்கிய இணையவாசிகள், இந்தத் தற்செயலான நிகழ்வை மூவர்ண ‘தேசியக் கொடி’ மற்றும் ‘தேசிய ஒருமைப்பாடு’ ஆகியவற்றின் அடையாளமாகக் குறிப்பிட்டு, பின்னணியில் ‘வந்தே மாதரம்’ பாடலை இணைத்து வீடியோக்களை உருவாக்கி வெளியிட, அது தற்பொழுது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
