CRIME
ஐயோ கடவுளே..”மகளுக்கு காதல் தொல்லை கொடுத்தவனை கண்டித்த தந்தைக்கு நேர்ந்த கொடூரம்..!” காதலன் செய்த வெறிச்செயல்.. விருதுநகரை உலுக்கிய சம்பவம்..!!
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூர் கிழக்கு காலனியைச் சேர்ந்த அய்யனார் (38), தனது மகளுக்குத் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்த பெரியசாமி என்பவரைக் கடுமையாக எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெரியசாமியும் அவரது குடும்பத்தினரும், அவ்வழியாகத் நடந்து சென்ற அய்யனாரை வழிமறித்துத் தகராாரில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அய்யனாரைக் குத்தியதில், அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த வத்திராயிருப்பு காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, கொலையில் தொடர்புடைய பெரியசாமி, அழகுராஜா மற்றும் கருப்பசாமி ஆகிய 3 பேரைக் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்தும் 17 நாட்டு வெடிகுண்டுகளையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
