ஆசிரியர்கள், மாணவிகள் யாரையும் விட்டு வைக்கல… செல்போன் முழுவதும் ஆபாசம்… இன்ஸ்ட்டா குரூப்பில் பகிர்ந்து மாணவன் செய்த காரியம்… போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!! – cinefeeds
Connect with us

CRIME

ஆசிரியர்கள், மாணவிகள் யாரையும் விட்டு வைக்கல… செல்போன் முழுவதும் ஆபாசம்… இன்ஸ்ட்டா குரூப்பில் பகிர்ந்து மாணவன் செய்த காரியம்… போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

Published

on

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில், மாணவிகள் மற்றும் பெண் பேராசிரியர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிட்ட கல்லூரி மாணவன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர். திரிக்காகரா பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் ‘பிபிஏ லாஜிஸ்டிக்ஸ்’ இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஸ்ரீஹரி எஸ். என்ற மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளான். கல்லூரி முதல்வரின் புகாரைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை அந்த மாணவனைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த அதிர்ச்சி உண்மை வெளிவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஸ்ரீஹரியின் மொபைல் போன் மற்றும் டிஜிட்டல் சாதனங்களைப் பறிமுதல் செய்து போலீசார் சோதித்த போது, அவனுடன் படிக்கும் மாணவிகள் மற்றும் பேராசிரியர்களின் மார்பிங் செய்யப்பட்ட பல ஆபாசப் புகைப்படங்களும் வீடியோக்களும் கண்டறியப்பட்டன. அந்த மாணவன் ஒரு குறிப்பிட்ட டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் குழுக்களில் உறுப்பினராக இருந்து கொண்டு, இந்த ஆபாச உள்ளடக்கங்களைப் பகிர்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது. கல்லூரி மாணவர் அமைப்பின் ஊடகப் பிரிவில் இருந்ததால், அதன் மூலமாக 2025 ஆம் ஆண்டு முதல் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளின் படங்களைச் சேகரித்து இந்த கொடூரச் செயலை அவன் செய்து வந்துள்ளான்.

Advertisement

இந்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகம் அந்த மாணவனைத் தப்பிக்க வைக்க முயல்வதாகவும், இதில் வேறு சிலருக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறி சக மாணவர்கள் கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் கல்லூரி நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளதுடன், செப்டம்பர் 1 ஆம் தேதி இந்த விஷயம் தெரிந்தவுடனேயே போலீசாருக்குத் தகவல் கொடுத்துவிட்டு, அந்த மாணவனைக் கல்லூரியிலிருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தற்போது இந்த ஆபாசப் படங்களைப் பகிர்வதற்காக அந்த மாணவன் எவரிடமாவது பணம் பெற்றானா என்ற கோணத்தில் அவனது வங்கிப் பரிவர்த்தனைகளையும், அந்த டெலிகிராம் குழுவில் உள்ள மற்ற நபர்களையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in