“இவங்க தான் உண்மையான தேவதைகள்” மருத்துவமனையில் பிரசவ வார்டில் திடீர் தீ விபத்து… 9 பிஞ்சு உயிர்களைப் போராடி மீட்ட செவிலியர்கள்… பரபரப்பு சிசிடிவி காட்சி வைரல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இவங்க தான் உண்மையான தேவதைகள்” மருத்துவமனையில் பிரசவ வார்டில் திடீர் தீ விபத்து… 9 பிஞ்சு உயிர்களைப் போராடி மீட்ட செவிலியர்கள்… பரபரப்பு சிசிடிவி காட்சி வைரல்..!!

Published

on

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜினகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள ஏசியன் மருத்துவமனையின் என்.ஐ.சி.யு வார்டில் நேற்றிரவு இந்த விபத்து நேர்ந்துள்ளது. அங்கு பொருத்தப்பட்டிருந்த குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீ விபத்து ஏற்பட்டவுடன் வார்டு முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பும் அச்சமும் நிலவியது. எனினும், அங்கு பணியில் இருந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உடனடியாகச் செயல்பட்டு, வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 9 பிறந்த குழந்தைகளையும் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட இந்தத் துரித நடவடிக்கையால் ஒரு பெரிய உயிர்ச் சேதம் தடுத்து நிறுத்தப்பட்டது.

Advertisement

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் 5 தீயணைப்பு வாகனங்களுடன் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை கடுமையாகப் போராடி வார்டில் பரவிய தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தின் போது பதிவான சிசிடிவி காட்சிகளில், வார்டின் ஒரு பகுதி தீப்பற்றி எரியத் தொடங்கும் கடைசி நொடிகள் வரை செவிலியர்கள் உயிரைப் பணயம் வைத்துக் குழந்தைகளை மீட்ட நெகிழ்ச்சியான காட்சிகள் பதிவாகியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in