CRIME
“பாட்டி, ரொம்ப வயிறு வலிக்குது…” டிரைவர் அங்கிள் அப்படி செஞ்சாரு.. வீட்டுக்கு வந்ததும் கதறி அழுத 3 வயது குழந்தை… மழலையர் பள்ளியி பேருந்துக்குள் நடந்த கொடூரம்…!!
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில், பள்ளிப் பேருந்துக்குள் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 30 வயது பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். புதன்கிழமை மதியம் காமோதே பகுதியில் உள்ள ஒரு மழலையர் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற அந்தப் பேருந்தில், மற்ற அனைத்துக் குழந்தைகளும் தத்தமது வீடுகளில் இறங்கிய பிறகு, சிறுமி மட்டும் தனியாக இருந்த சமயத்தில் ஓட்டுநர் இந்தத் துரோகச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
மாலை வீடு திரும்பிய சிறுமி கடுமையான வயிற்று வலி இருப்பதாகக் கூறி, பேருந்து ஓட்டுநர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதை அவளது பாட்டியிடம் விவரித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாட்டி உடனடியாகப் பள்ளி நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்து, காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். சிறுமிக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவளுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஓட்டுநர் மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஓட்டுநர் வியாழக்கிழமையன்று பன்வெல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட நபரைச் சனிக்கிழமை வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், பள்ளிப் பேருந்தில் பணியில் இருந்த மற்ற ஊழியர்களிடமும் இந்தச் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெறவும், தீவிர விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
