ரொம்ப ஹேப்பி..! விஜய் போட்ட 110 விதி.. நெகிழ்ந்து அறிக்கை விட்ட நடிகர் அஜித்.. தமிழ்நாட்டை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ்’ திட்டதிற்கு பாராட்டு ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரொம்ப ஹேப்பி..! விஜய் போட்ட 110 விதி.. நெகிழ்ந்து அறிக்கை விட்ட நடிகர் அஜித்.. தமிழ்நாட்டை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ்’ திட்டதிற்கு பாராட்டு ..!!

Published

on

தமிழ்நாட்டில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்வதை உலகிற்குப் பறைசாற்றும் வகையிலும், மாநிலத்தை உலகளாவிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் மையமாக மாற்றும் நோக்கோடும் இந்த பிரம்மாண்டத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பிற்கு நடிகரும், பிரபல கார் பந்தய வீரருமான அஜித் குமார் தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டு இளைஞர்களை விளையாட்டுத் துறையின் பக்கம் ஈர்த்து, அவர்களிடம் உள்ள திறமைகளை முறையாக வளர்த்தெடுப்பதற்காக தமிழ்நாடு அரசு எடுத்து வரும் இத்தகைய முன்னெடுப்புகள் மிகவும் பாராட்டுக்குரியவை என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

Advertisement

மேலும், விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் புகழ்பெற்ற வரிகளைச் சற்றே மாற்றி, “தமிழ்நாடு அரசின் இந்த ஒரு சிறிய அடி, இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறைக்கான ஒரு பிரம்மாண்டமான பாய்ச்சல்” (One small step by the Tamil Nadu Government, one giant leap for Indian motorsports) என அஜித் குமார் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், முதலமைச்சர் விஜய் மேற்கொள்ளும் இந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி உள்ளிட்ட அனைத்து முயற்சிகளும் பெரும் வெற்றி பெறத் தனது வாழ்த்துகளையும் பகிர்ந்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in