LATEST NEWS
“திமுகவை போலவே பாஜகவும்… விரைவில் வெளிச்சத்திற்கு வரும் ரகசிய உறவு..!” நயினார் நாகேந்திரனை கிழித்து தொங்க விட்ட அமைச்சர் ராஜ்மோகன்.. தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு!
முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய அநாகரீகமான பேச்சு தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்குச் கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் ராஜ்மோகன், பாஜகவினர் திமுகவைச் போலவே அவதூறாகப் பேசி வருவதாகவும், விரைவில் திமுக – பாஜக இடையேயான மறைமுக உறவு வெளிச்சத்துக்கு வரும் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். மேலும், சத்தமில்லாமல் ஒவ்வொரு நாளும் மக்கள் நலனுக்கான சாதனைகளை முதல்-அமைச்சர் விஜய் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வாக்காளர்களுக்கு நல்ல சாவு வராது என்று ஆர்.எஸ்.பாரதி பேசிய விவகாரம் குறித்துப் பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், அவ்வாறு பேசுவது ஏற்புடையதல்ல என்றும், சைதாப்பேட்டை தொகுதி மக்களுக்கு இனிவரும் காலத்தில் நல்வாழ்வு கிடைக்கப் போகிறது என்றும் கூறினார். இந்த விவகாரங்கள் தற்போது மாநில அரசியலில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
