நான் பதில் சொல்றேன்.. ஆனா நீங்க எழுந்து ஓடமாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க.. உதயநிதிக்கு பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்… சட்டப்பேரவையில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நான் பதில் சொல்றேன்.. ஆனா நீங்க எழுந்து ஓடமாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க.. உதயநிதிக்கு பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்… சட்டப்பேரவையில் பரபரப்பு..!!

Published

on

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது, ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடுமையான காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறை செயல்பாடுகள் குறித்து பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனால் அவையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே பெரும் சலசலப்பும் விவாதமும் நீடித்தது .

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும், வரும் திங்கள்கிழமை அன்று விரிவான முறையில் பதிலளிக்கப் போவதாக முதலமைச்சர் விஜய் அதிரடியாக அறிவித்தார் . மேலும் அவர் பேசுகையில், “திங்கள்கிழமை நான் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன், ஆனால் அதற்கு முன்பாக யாரும் அவையை விட்டு எழுந்து ஓடிவிடக்கூடாது என பிராமிஸ் செய்ய வேண்டும்” என்று எதிர்க்கட்சியினரை நோக்கிக் கூறிவிட்டு அவையிலிருந்து புறப்பட்டார்.

Advertisement

முதலமைச்சர் விஜய்யின் இந்த கருத்துக்கு உடனடியாகப் பதிலடி கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “இப்போது யார் அவையை விட்டு ஓடிப்போகிறார்கள் என்பது இங்குள்ள எல்லாருக்கும் நன்றாகவே தெரியும்” என ஆவேசமாகக் குறிப்பிட்டார். உதயநிதியின் இந்த அதிரடிப் பேச்சால் ஆளுங்கட்சி வரிசையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன், சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரில் பெரும் பரபரப்பும் சலசலப்பும் ஏற்பட்டது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in