LATEST NEWS
எங்களுக்கு வந்தா ரத்தம், உங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா..? “பாஜக அடிச்சா, வலிச்சாலும் வெளிய சொல்லக் கூடாது” தவெகவை அட்டாக் செய்த் உதயநிதி…!!
மிழக சட்டப்பேரவையின் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில், தவெக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே காரசாரமான அரசியல் மோதல் வெடித்துள்ளது பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசின் மீதும் முதலமைச்சர் விஜய் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் அரசுக்கு எதிராகப் போராடும் எதிர்க்கட்சியினர் மற்றும் மாணவர்களை உடனடியாகக் கைது செய்யும் இந்த அரசு, தங்களை நேரடியாக விமர்சிக்கும் பாஜக தலைவர்கள் மீது எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று அவர் சாடினார்.
தொடர்ந்து ஆளுங்கட்சியின் அரசியல் அணுகுமுறையை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின், “பாஜக அடிச்சா, வலிச்சாலும் வெளிய சொல்லக் கூடாது” என்பதுதான் தற்போதைய ஆளுங்கட்சியின் அரசியல் ரீதியான தந்திரமாக இருக்கிறது என்று மிகக் காட்டமாகத் தெரிவித்தார். மேலும், சட்டம் ஒழுங்கு மற்றும் கைது நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அவர், “எங்களுக்கு வந்தால் ரத்தம், உங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?” எனக் கேள்வி எழுப்பியதோடு, இத்தகைய பாரபட்சமான அரசியல் அணுகுமுறையை தாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை என்றும் பேரவையில் சுட்டிக்காட்டினார்.
மாணவர் போராட்டங்களை அரசு கண்காணிப்பது தொடர்பாகச் சுற்றறிக்கை அனுப்பப்பட்ட விவகாரத்தைக் குறிப்பிட்ட உதயநிதி, இவையெல்லாம் முதலமைச்சருக்குத் தெரிந்துதான் நடக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். இந்த விவாதத்தின் போது, சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் தரப்பில் தவெக அரசுக்கு ஆதரவாகப் பதிலடிகள் கொடுக்கப்பட்ட நிலையில், வரும் திங்கள்கிழமை அன்று முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சியினரின் அனைத்துக் கேள்விகளுக்கும் உரிய ஆதாரங்களுடன் விரிவான பதிலளிப்பார் என்று சபாநாயகர் பேரவையில் விளக்கமளித்தார்.
