சட்டமன்றத்துல என் முன்னாடி உட்காரவே வெட்கப்படுறாரு… 47 எம்.எல்.ஏ-வை வச்சுக்கிட்டு முதல்வர் ஆக சதித் திட்டம்… மேடையிலேயே இபிஎஸ்-ஐ கிழித்தெடுத்த செங்கோட்டையன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சட்டமன்றத்துல என் முன்னாடி உட்காரவே வெட்கப்படுறாரு… 47 எம்.எல்.ஏ-வை வச்சுக்கிட்டு முதல்வர் ஆக சதித் திட்டம்… மேடையிலேயே இபிஎஸ்-ஐ கிழித்தெடுத்த செங்கோட்டையன்..!!

Published

on

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் அதிமுகவின் மூத்த தலைவரும் தமிழக அமைச்சருமான செங்கோட்டையன், தவெக வேட்பாளர் சத்யபாமாவிற்கு ஆதரவாகத் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மேடையில் பேசிய அவர், சட்டமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தற்போதைய அரசியல் சூழல்கள் குறித்துப் பல்வேறு அதிரடியான மற்றும் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துப் பேசினார்.

அமைச்சர் செங்கோட்டையன் தனது பிரசார மேடையில் பேசுகையில், “சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி எனக்கு நேருக்கு நேர் சீட் அமைந்திருப்பதால் அங்கே அமர வெட்கப்படுகிறார்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். மேலும், “சட்டமன்றத்தில் வெறும் 47 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே வைத்துக்கொண்டு, எப்படியாவது குறுக்கு வழியில் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று எடப்பாடி பழனிசாமி சதித் திட்டம் தீட்டினார்; அவரின் அந்த சதித் திட்டத்திற்குச் சரியான சவுக்கடி கொடுத்தவர்தான் இந்த சத்யபாமா” என்று வேட்பாளரைப் பாராட்டிப் பேசினார்.

Advertisement

தொடர்ந்து அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் குறித்துப் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி தனது சுயநலத்திற்காக முன்னாள் அமைச்சர்களின் பதவிகள் எல்லாவற்றையும் பிடுங்கிவிட்டார் என்று குற்றம் சாட்டினார். இறுதியாக, “நான் சரியான நேரத்தில் சரியான இடத்தில் (தவெக) வந்து சேர்ந்ததால்தான் இன்று அமைச்சராகி இருக்கிறேன்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்ட செங்கோட்டையன் பேச்சு தாராபுரம் தேர்தல் களத்தில் அதிமுக மற்றும் தவெக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in