என்னடா இது.? வானத்திலிருந்து கொத்துக்கொத்தாக விழுங்க பாம்புகள்… மழையோடு வந்த விசித்திர ஆபத்து… அலறியடித்த மக்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னடா இது.? வானத்திலிருந்து கொத்துக்கொத்தாக விழுங்க பாம்புகள்… மழையோடு வந்த விசித்திர ஆபத்து… அலறியடித்த மக்கள்..!!

Published

on

இடியுடன் கூடிய புயல் மழையின் போது ஆயிரக்கணக்கான பாம்புகள் வானத்திலிருந்து மழையாகக் கொட்டிய விசித்திரமான சம்பவம் மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாம்புகளைக் கண்டு அஞ்சுபவர்களுக்கு, அவை திடீரென வானத்திலிருந்து விழுவது ஒரு மர்மமான அல்லது அமானுஷ்ய நிகழ்வாக இருக்குமோ என்ற அச்சத்தையும் விவாதங்களையும் சமூக வலைதளங்களில் கிளப்பியுள்ளது.

இருப்பினும், இந்த வினோத நிகழ்வுக்குப் பின்னால் எந்தவொரு அமானுஷ்ய சக்தியும் இல்லை என்றும், இதற்கு முற்றிலும் அறிவியல் பூர்வமான இயற்கைக் காரணமே உண்மை என்றும் நிபுணர்கள் விளக்குகிறார்கள். கடுமையான புயல் அல்லது சுழற்காற்று நீர்நிலைகளின் மீதோ அல்லது காடுகளின் மீதோ வீசும்போது, அங்குள்ள பாம்புகள், தவளைகள் அல்லது மீன்கள் போன்ற உயிரினங்களை அடியோடு மேலே தூக்கிச் சென்று விடுகின்றன.

Advertisement

இவ்வாறு சுழற்காற்றின் வேகத்தால் மேகக் கூட்டங்களுக்குள் இழுத்துச் செல்லப்படும் இந்த உயிரினங்கள், பல கிலோமீட்டர் தூரத்திற்குத் தூக்கி வீசப்படுகின்றன. பின்னர் காற்றின் வேகம் குறையும் போது, அவை மழைத் துளிகளுடன் சேர்ந்து பூமியில் விழுகின்றன. அறிவியல் ரீதியாக இது “விலங்கு மழை” என்று அழைக்கப்படுகிறது. எனவே, இது இயற்கையின் ஒரு அரிய விசித்திர நிகழ்வே தவிர, எந்தவொரு இயற்கைக்கு அப்பாற்பட்ட மர்மமும் அல்ல என்று அறிவியல் அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in