LATEST NEWS
“சட்டமன்றம் என்ன அப்பாவை தேடுற இடமா..?” நான்கூட என்ன நினச்சேன் தெரியுமா..? முதல்வர் விஜய்யின் சைகையை மேடையில் கிண்டல் செய்த இபிஎஸ்..!!
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் வேட்பாளர் பானுமதியை ஆதரித்து தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மேடையில் பேசிய அவர், தமிழக முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் கையை நெற்றியில் வைத்துத் தேடுவது போன்ற சைகை செய்ததைச் சுட்டிக்காட்டி மிகக் கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்தார்.
பிரசாரக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “முதலமைச்சர் சட்டமன்றத்தில் இப்படியே கையை வைத்துத் தேடினார். எனக்குக் கூட முதலில் அவருக்குக் கண் தெரியவில்லையோ என்றுதான் நினைத்தேன்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். “அதன் பின்புதான் தெரிந்தது, அவர் தனது அப்பாவைத் தேடுகிறார் என்று” எனக் கூறி கூட்டத்தில் பரபரப்பைக் கிளப்பினார்.
தொடர்ந்து தவெக தலைவரும் முதல்வருமான விஜயை சாடிய எடப்பாடி பழனிசாமி, “சட்டமன்றம் என்ன அப்பாவைத் தேடும் இடமா? அப்பாவைக் காணோம் என்றால் சட்டமன்றத்திற்கு வெளியே போய் தேடுங்கள்” என்று மிகக் காட்டமாக விமர்சித்துப் பேசினார். இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சன் நியூஸ் செய்தி நிறுவனத்தின் தகவல்படி எடப்பாடியின் இந்த விமர்சனம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
