திமுக தலையில் இடி..! “அந்த ஒற்றை வார்த்தை” முதல்வர் விஜய்யின் மதுராந்தகம் சபதம்.. லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்த டார்கெட் இவர்தானா..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

திமுக தலையில் இடி..! “அந்த ஒற்றை வார்த்தை” முதல்வர் விஜய்யின் மதுராந்தகம் சபதம்.. லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்த டார்கெட் இவர்தானா..?

Published

on

மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரையில் தமிழக முதலமைச்சர் C. ஜோசப் விஜய் நேற்று வெளியிட்ட காரசாரமான பேச்சு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களை இலக்கு வைக்கும் அடுத்தகட்ட நடவடிக்கையின் அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது . “பொதுமக்களின் பணத்தை வீணடித்த ஊழல்வாதிகளை எக்காரணம் கொண்டும் விடமாட்டோம்” என்று முதல்வர் விஜய் தொடர்ந்து முழங்கி வரும் நிலையில் , கடந்த சில மாதங்களாகவே திமுகவின் முக்கிய புள்ளிகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) தீவிர சோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது .

ஏற்கெனவே, முன்னாள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவுக்கு நெருக்கமான வட்டாரங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனைகளை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளது . அதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாத இறுதியில் முன்னாள் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலுவின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் (MP) சி.என். அண்ணாதுரையின் இல்லம் உட்பட 13-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் . கடந்த ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத்துறை திட்ட டெண்டர்களில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, எ.வ. வேலுவுக்கு எதிராகவும் DVAC முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரித்து வருகிறது

Advertisement

அரசியல் விமர்சகர்களின் கூற்றுப்படி, அண்ணாதுரை எம்பி வீட்டில் நடத்தப்பட்ட இந்த DVAC சோதனையானது, எ.வ. வேலுவைச் சுற்றி வளைப்பதற்கான ஆரம்பகட்ட நகர்வாகவே கருதப்படுகிறது . சட்டப்பேரவையில் திமுகவினர் பேசும்போது முதல்வர் விஜய் முறுவலுடன் “சரியான நேரம் வரும்போது ஆதாரங்களை வெளியிடுவேன்” என்று சிக்னல் கொடுத்ததும் , நேற்று மேடையில் “ஊழல்வாதிகளை விடமாட்டோம்” என மீண்டும் எச்சரித்ததும் , எ.வ. வேலு மீதான அடுத்தகட்ட சட்டபூர்வ நடவடிக்கை மிக நெருக்கமாகிவிட்டதையே உணர்த்துவதாக அரசியல் வட்டாரங்கள் விவாதிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in