LATEST NEWS
“சட்டை எங்களது, மாப்ள அவங்க..!” தவெக அரசைத் தனது பாணியில் நக்கல் செய்த முன்னாள் அமைச்சர்… பரபரக்கும் அரசியல் களம..!!
மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், தற்போதைய தமிழக அரசை “படையப்பா படம் மாதிரி ‘சட்டை எங்களது, மாப்ள அவங்க’ என்பது போல இந்த அரசு உள்ளது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது பாணியில் மிகக் காரசாரமாக விமர்சித்துப் பேசியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,”என்றைக்கு ஆட்சி மாற்றம் வந்ததோ, Genz தலைவர் என்று முதலமைச்சர் ஆனாரோ, அன்றிலிருந்து வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது” என்று அவர் பொதுமக்களிடையே அனல் பறக்க முழங்கியுள்ளார். தற்போதைய முதலமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவை ஜாக்பாட்டில் தற்செயலாக ஆட்சி அமைத்துவிட்டதாகவும், இது ஒரு மைனாரிட்டி ஆட்சி என்றும் அவர் அலங்காநல்லூர் போராட்டக் களத்தில் நின்று கடுமையாகச் சாடியுள்ளார்.
அதிமுக சார்பில் நடத்தப்பட்ட இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், செல்லூர் ராஜூவின் இந்தத் திரைப்படப் பாணி நக்கல் பேச்சைக் கேட்டு அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மாபெரும் சிரிப்பலையும் உற்சாகமும் வெடித்தது. புதிய அரசு பதவி ஏற்றது முதல் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அசாத்தியமாக அதிகரித்து மக்கள் அவதிப்படுவதை, அவர் புதிய முதலமைச்சரின் ஆட்சி மாற்றத்தோடு நகைச்சுவையாகவும் அதே சமயம் அரசியல் ரீதியாகவும் ஒப்பிட்டுத் தாக்கியுள்ளார்.
