LATEST NEWS
சாப்பாட்டுல விஷம் இல்ல..! அப்போ 5 பேர் ஒரே நேரத்துல செத்தது எப்படி..?! தூக்கில் தொங்கிய கணவன்… ரத்த வெள்ளத்தில் மனைவி, பிள்ளைகள்..! 47 நாட்களுக்குப் பிறகும் விலகாத ராய்ப்பூர் மர்ம மரண முடிச்சு..!!
சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரின் சஞ்சய் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தடயவியல் அறிக்கை வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை 17-ஆம் தேதி இரவு, பேட்டரி வியாபாரியான சாஜித் அலி, அவரது மனைவி ராபியா, மகன் இர்ஷாத் மற்றும் மகள்கள் ஷாஹிதா, இர்பாஷா ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதில் சாஜித் அலி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதும், மற்ற நான்கு பேரும் விஷம் அருந்தி உயிரிழந்ததும் தெரியவந்தது. தற்போது வந்துள்ள தடயவியல் அறிக்கையின்படி, குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் ‘சல்ஃபாஸ்’ எனும் விஷத்தைச் சாப்பிட்டதால் உயிரிழந்துள்ளனர் என்றும், அது அவர்கள் சாப்பிட்ட உணவிலோ அல்லது இனிப்பிலோ கலக்கப்படவில்லை என்றும் தெளிவாகியுள்ளது.
இருப்பினும், இந்தச் சம்பவம் நடந்து 47 நாட்கள் கடந்த பின்னரும், இதற்கான காரணமும் பின்னணியும் இன்னும் மர்மமாகவே நீடிக்கிறது. இந்த வழக்கைச் சிறப்பு விசாரணைக் குழு தொடர்ந்து விசாரணை செய்து வந்தபோதிலும், சாஜித் அலி ஏன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார், மற்ற குடும்ப உறுப்பினர்கள் ஏன் விஷம் சாப்பிட்டார்கள் என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. இதனிடையே, டிக்ராபாரா காவல் துறையின் பெரும் அலட்சியமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சம்பவம் நடந்து 47 நாட்கள் ஆகியும், உயிரிழந்தவர்களில் ஒருவரது உடற்பகுதி சாம்பிள் இன்னும் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்படவே இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கு குறித்துக் காவல் துறை கூறுகையில், நான்கு பேரின் உடற்பகுதி சாம்பிள்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதாகவும், அதில் மூன்று பேரின் தடயவியல் அறிக்கைகள் மட்டுமே தற்போது கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இன்னும் ஒருவரின் அறிக்கை வர வேண்டியுள்ளது. அனுப்பப்பட்ட அனைத்து அறிக்கைகளும் முழுமையாகக் கிடைத்துப் பரிசீலிக்கப்பட்ட பின்னரே, ஐந்து பேரின் இறப்பிற்கான உண்மையான காரணம் மற்றும் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள முழு விவரங்களும் அதிகாரப்பூர்வமாக வெளிக்கொண்டு வரப்படும் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
