“நான் செத்தா வெளிய சொல்லக்கூட ஆள் இல்லை..!” கேமரா முன்னாடியே கதறி அழுத ‘காதல்’ பட நடிகை.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!! – cinefeeds
Connect with us

CINEMA

“நான் செத்தா வெளிய சொல்லக்கூட ஆள் இல்லை..!” கேமரா முன்னாடியே கதறி அழுத ‘காதல்’ பட நடிகை.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!!

Published

on

காதல்’ திரைப்படத்தில் நடிகை சந்தியாவின் தோழியாக நடித்துப் பிரபலமான நடிகை சரண்யா, சமீபத்திய யூடியூப் பேட்டி ஒன்றில் தன் வாழ்க்கையில் சந்தித்து வரும் தீராத தனிமை மற்றும் குடும்பப் பின்னணி குறித்து மிகுந்த வேதனையுடன் பகிர்ந்துள்ளார். தனது சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், தனக்கு 19 வயது இருக்கும்போது தாய் மறுமணம் செய்து கொண்டதாகக் கூறியுள்ளார். அந்தச் சமயத்தில் தனது தாயைச் சமாதானம் செய்து தன்னுடன் குடும்பமாக வாழ அழைத்தபோதிலும், அவர் தன்னுடன் வர மறுத்துவிட்டதாகச் சரண்யா மிகுந்த மனவருத்தத்துடன் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தினர் யாரும் இன்றித் தனியாக வாழ்ந்து வரும் தனக்கு, எதிர்காலம் குறித்த பயமும் தனிமையும் சூழ்ந்திருப்பதாக அவர் உருக்கமாகப் பேசியுள்ளார். குறிப்பாக, “நான் ஒருவேளை செத்துப்போனால், என் இறப்புச் செய்தியைக்கூட வெளியில் சொல்வதற்கு எனக்கு என்று யாருமே இல்லையே” என்ற வருத்தம் தனக்குள் மிகப்பெரிய வடுவாக இருப்பதாகக் கூறி கண்ணீர் மல்கியுள்ளார். சினிமா உலகிற்கு வந்து பல ஆண்டுகள் கடந்தும், தன் சொந்த வாழ்க்கையில் ஆதரவளிக்க ஒரு உறவுகூட இல்லாமல் தவித்து வரும் காதல் நடிகை சரண்யாவின் இந்த உருக்கமான பேட்டி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in