LATEST NEWS
“விஜய் பதவி விலக வேண்டும்.. நாடு கோமாளிகள் கையில் இருக்கக் கூடாது..!” திருச்சி சிறை வாசலில் சீறிய நாம் தமிழர் கார்த்திகா..!!
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா ஜாமினில் விடுவிக்கப்பட்டதை அடுத்து, திருச்சி சிறை வாசலில் திரண்டிருந்த அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். சிறையிலிருந்து வெளியே வந்த கார்த்திகா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “மக்களிடம் சென்று வாக்கு கேட்கும் அரசியல் உரிமையைப் பறிப்பது மிகப்பெரிய விதிமீறல்” என்று அவர் தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறையின் நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.
தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்தும், தற்போதைய ஆட்சி குறித்தும் கார்த்திகா மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “விஜய்க்கு அரசியல் செய்யத் தெரியவில்லை என்றால், அவர் உடனடியாகத் தனது பதவியிலிருந்து விலகட்டும்” என்றும், “இந்த நாடு கோமாளிகளின் கைகளில் இருக்கக் கூடாது, மாறாகப் போராளிகளான நாம் தமிழர்களின் கைகளில் தான் இருக்க வேண்டும்” என்றும் அவர் ஆவேசமாகப் பேசினார். கார்த்திகாவின் இந்த அதிரடியான பேட்டி மற்றும் சிறை மீட்பு அரசியல் வட்டாரத்தில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.
