யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்..! சங்கீதா வருவார் என எதிர்பார்த்த வேளையில்… விஜய்யின் அம்மா பக்கத்திலேயே அமர்ந்த த்ரிஷா.. சுதந்திர தின விழாவில் மாஸ் என்ட்ரி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்..! சங்கீதா வருவார் என எதிர்பார்த்த வேளையில்… விஜய்யின் அம்மா பக்கத்திலேயே அமர்ந்த த்ரிஷா.. சுதந்திர தின விழாவில் மாஸ் என்ட்ரி..!!

Published

on

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மஞ்சள் நிறப் புடவையில் வருகை தந்திருந்த நடிகை த்ரிஷா, பார்வையாளர்கள் பகுதியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். முதல் வரிசையில் முதலமைச்சரின் பெற்றோரான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோருக்கு அருகிலேயே த்ரிஷாவும், அவரது தாய் உமாவும் அமர்ந்திருந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக, தனது கணவர் விஜய்யுடன் நிலவி வந்த விவாகரத்து வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டதாகக் கூறப்பட்ட நிலையில், அவருடைய மனைவி சங்கீதா இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அவருக்குப் பதிலாக த்ரிஷா குடும்பத்தினருடன் முதல் வரிசையில் அமர்ந்திருந்தது இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in