LATEST NEWS
முதல்வர் விஜய்க்கு ‘சல்யூட்’ அடித்த த்ரிஷா… 80-வது சுதந்திர தின விழாவில் அரங்கேறிய சம்பவம்… வைரலாகும் வீடியோ..!!
சென்னையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில், தமிழக முதலமைச்சர் விஜய் முதன்முறையாகத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முப்படைகள் மற்றும் காவல்துறையினரின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையைச் சல்யூட் அடித்து ஏற்றுக்கொண்டார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் காண்பதற்காகப் பிரமுகர்கள் மற்றும் சிறப்புப் பார்வையாளர்கள் பகுதியில் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களும் கலந்துகொண்டனர். முதலமைச்சரின் இந்த முதல் சுதந்திர தின உரை மற்றும் அரசு விழா நிகழ்வுகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.
அப்போது சிறப்புப் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த பிரபல முன்னணி நடிகை த்ரிஷா, அணிவகுப்பு மரியாதையை ஏற்றவாறு தம்மைக் கடந்து சென்ற முதலமைச்சர் விஜய்க்கு, மிகுந்த மரியாதையுடன் எழுந்து நின்று தானும் சல்யூட் அடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் பொது மேடையில் இத்தகைய நெகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்துகொண்ட இந்தக் காட்சி, தற்போது சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகித் தீயாய் பரவி வருகிறது.
