திரையுலகில் மற்றுமொரு இழப்பு…! கே.பாலச்சந்தர் செதுக்கிய மற்றொரு வைரம் சாய்ந்தது… ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் ஜி.வி. நாராயண ராவ் காலமானார்..!! – cinefeeds
Connect with us

CINEMA

திரையுலகில் மற்றுமொரு இழப்பு…! கே.பாலச்சந்தர் செதுக்கிய மற்றொரு வைரம் சாய்ந்தது… ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் ஜி.வி. நாராயண ராவ் காலமானார்..!!

Published

on

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான G.V. நாராயண ராவ் உடல்நலக் குறைவால் காலமானார். இவர் 1976-ஆம் ஆண்டு இயக்குநர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘அந்துலேனிகதா’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். திரையுலகில் இவரது சிறந்த நடிப்புக்காக ஆந்திர அரசின் உயரிய நந்தி விருதையும் பெற்றுள்ளார்.

இயக்குநர் கே. பாலச்சந்தரின் திரையுலகப் பள்ளியிலிருந்து வந்தவர் என்பதால், இவர் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பராகவும் விளங்கினார். மேலும், இவர் தெலுங்கில் தயாரித்து வெற்றி பெற்ற திரைப்படமே, பின்னர் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் ‘அதிசய பிறவி’ என்ற திரைப்படமாக மறுஆக்கம் செய்யப்பட்டு வெளியானது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in