LATEST NEWS
“நான் பெரிய பணக்காரி, நீயோ ஒரு செக்யூரிட்டி..!” திமிராகப் பேசிய பெண்.. அடுத்த வினாடியே நடந்த அதிரிபுதிரி சம்பவம்.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
பாதுகாப்பு அதிகாரி தன்னை எச்சரித்தபோது, “நான் பணக்காரப் பெண், நீயோ ஒரு சாதாரண செக்யூரிட்டி கார்டு. அதனால் நான் சொல்லும் இடத்தில்தான் என் காரை நிறுத்த வேண்டும்” என்று திமிராகப் பேசிய பெண்ணுக்கு, அந்த அதிகாரி அறக்கப் பரக்க அறைந்து தக்க பாடம் புகட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தான் வைத்ததே சட்டம் என்ற அகந்தையில் செயல்பட்ட அந்தப் பெண்ணின் ஆணவத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
امرأة قالت لحارس الأمن الذي حذرها أنا غنية وأنت مجرد حارس أمن وأوقف سيارتي في المكان اللي أبيه قبل أن يوجه لها صفعة على وجهها لتقوم بعدها بإبعاد سيارتها pic.twitter.com/SWNoTSn2I6— كلوڤر (@ISi3_) August 13, 2026
இதனைத் தொடர்ந்து, அந்தப் பாதுகாப்பு அதிகாரியின் திடீர் மற்றும் அதிரடியான அறையினால் நிலைதடுமாறிப் போன அந்தப் பெண், தனது பணக்காரத் திமிரை விடுத்து உடனடியாகக் காரை அங்கிருந்து வேறு இடத்திற்கு நகர்த்திச் சென்றார்; ஒருவரின் பொருளாதார நிலையை வைத்து மற்றவர்களைத் தாழ்த்திப் பேசும் நபர்களுக்கு இந்தச் சம்பவம் ஒரு தகுந்த பாடமாக அமைந்துள்ளதாகக் கூறி இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
