LATEST NEWS
“ஐயோ கடவுளே..!” 11 வருட கோமா போராட்டத்திற்குப் பிறகு குத்துச்சண்டை வீரர் மரணம்… கண்ணீரில் மூழ்கிய ரசிகர்கள்..!!
முன்னாள் உலகத் தரம் வாய்ந்த குத்துச்சண்டை வீரரான பிரிச்சர்ட் கோலன் தனது 33வது வயதில் காலமானார் என்ற செய்தி விளையாட்டு உலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு டெரல் வில்லியம்ஸ் என்ற வீரருக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது, விதிகளுக்குப் புறம்பாக அவரது தலையின் பின்புறத்தில் தாக்கப்பட்டதால் (Rabbit Punches) அவருக்கு மூளையில் கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனால் சுமார் 221 நாட்கள் கோமா நிலைக்குச் சென்ற அவர், அதன் பிறகு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, பேசும் மற்றும் நடக்கும் திறனை இழந்து படுக்கையிலேயே முடங்கினார். இந்த நிலையில், கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக படுக்கையில் இருந்தபடியே வாழ்விற்கானப் போராட்டம் நடத்தி வந்த அவர், ஆகஸ்ட் 13, 2026 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது தந்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
💔 TRISTE NOTICIA PARA EL MUNDO DEL BOXEO.
Hoy nos toca despedir a Prichard Colón, el joven exboxeador que durante más de una década libró una batalla muy distinta a la que conoció dentro del ring.
Tenía apenas 33 años.
Su historia comenzó a cambiar después de aquella pelea de… pic.twitter.com/QbqoXTUrXq— Aura Sabia (@AuraSabiaxX) August 13, 2026
பிரிச்சர்ட் கோலனின் இந்த மறைவு, விளையாட்டுப் போட்டிகளில் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதன் அவசியத்தை மீண்டும் உலகிற்கு உணர்த்தியுள்ளது. குத்துச்சண்டை போட்டிகளில் அவரது திறமையும், காயத்திற்குப் பிறகு அவரது குடும்பத்தினர் அவருக்கு அளித்த அளப்பரிய ஆதரவும், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை நெகிழச் செய்தது. அவரது இந்த சோகமான விபத்திற்குப் பிறகுதான், குத்துச்சண்டையில் தலையின் பின்புறம் தாக்குவதைத் தடுக்க ‘பிரிச்சர்ட் கோலன் விதி’ என்ற கடுமையான விதிமுறை கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குத்துச்சண்டை உலகிற்குப் பேரிழப்பாகக் கருதப்படும் இவரது ஆன்மா சாந்தியடைய உலகெங்கிலும் உள்ள விளையாட்டு ரசிகர்களும் உலக குத்துசண்டை அமைப்புகளும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்
