LATEST NEWS
“என்னடா சொன்ன.. என்கிட்ட காசு இல்லையா..?” வால்கார்ட் சூப்பர் மார்க்கெட்டில் கிண்டல் செய்த நபரை வாயடைக்க வைத்த இளம்பெண்..இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ..!!
வால்மார்ட் பல்பொருள் அங்காடியில் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்த இளம் பெண் ஒருவரிடம், அங்கு நின்றுகொண்டிருந்த நபர் ஒருவர் அவமதிக்கும் வகையில் “உன்னிடம் காசு இல்லை, நீயெல்லாம் எதற்கு இங்கு வந்திருக்கிறாய்?” என்று நக்கலாகப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மற்றவர்களின் மலிவான வார்த்தைகளுக்கு வாய்ச் சண்டை மூலம் பதிலடி கொடுக்காமல், அந்தப் பெண் துளியும் தயங்காமல் தனது செல்போனை வெளியே எடுத்து வங்கிக் கணக்கில் இருந்த பிரம்மாண்டமான பண இருப்பைக் காட்டிய விதம் அங்கிருந்த அனைவரையும் ஒரே நொடியில் வாயடைத்துப் போகச் செய்துள்ளது.
https://twitter.com/sdemvv/status/2087989524723106294/video/1
பணத்தை வைத்து ஒருவரின் தகுதியை மதிப்பிடும் மனிதர்களுக்குத் தனது செயல் மூலமே தக்க பதிலடி கொடுத்த அந்தப் பெண்ணின் வைரல் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வதந்திகளையும் அவமதிப்புகளையும் நம்பி மற்றவர்களைக் குறை கூறுபவர்களுக்குப் புரியும் வகையில் அந்தப் பெண் காட்டிய துணிச்சலான பதிலடி, இணையத்தில் பலராலும் ரசிக்கப்பட்டு வருவதோடு தற்போது மிக வேகமாகப் பரவி வருகிறது.
