LATEST NEWS
கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா..? காரின் சக்கரங்களுக்கு இடையே சிக்கிய சிறுவன்… அலறித் துடித்தும் நிறுத்தாமல் இழுத்துச் சென்ற கொடூர ஓட்டுநர்..!நெஞ்சை நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், மிதிவண்டியில் சென்ற சிறுவன் மீது கார் மோதி, அவனை சில மீட்டர்கள் தூரம் இழுத்துச் சென்ற அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகிப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரின் கல்யாண்பூர் பகுதியில் உள்ள கைலாஷ் விஹாரின் ஆவாஸ் விகாஸ் அருகே இச்சம்பவம் நடந்துள்ளது. காயமடைந்த சிறுவன் அப்பகுதியைச் சேர்ந்த சந்தீப் திவாரி என்பவரின் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சிசிடிவி காட்சிகளின்படி, சிறுவன் ஒரு சந்துப் பாதையில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த போது, மற்றொரு திசையிலிருந்து ஒரு கார் அந்தச் சாலைக்குள் திரும்பியுள்ளது. கார் அருகில் வருவதைக் கண்ட சிறுவன் மிதிவண்டியை நிறுத்தி, அதன் பாதையிலிருந்து விலக முயற்சி செய்துள்ளான். இருப்பினும், கார் தொடர்ந்து முன்னேறி சிறுவன் மீது மோதியதில், சிறுவனும் அவனது மிதிவண்டியும் காரின் பின் சக்கரங்களுக்கு அடியில் சிக்கிக் கொண்டனர்.
சிறுவன் அடியில் சிக்கிய பிறகும் கார் நிறுத்தப்படாமல் தொடர்ந்து இயக்கப்பட்டதை சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன. சிறுவனை சில தூரம் இழுத்துச் சென்ற ஓட்டுநர், பின்னர் அவனைச் சாலையோரத்தில் போட்டுவிட்டு காரை விட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். அருகிலிருந்த பொதுமக்கள் சிறுவனை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கல்யாண்பூர் காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ஓட்டுநரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
