LATEST NEWS
“நெஞ்சே பதறுது.. இ-ரிக்ஷாவால் நேர்ந்த கொடூரம்…” கண்ணிமைக்கும் நேரத்தில் கவிழ்ந்த கார்.. பின்பக்கக் கண்ணாடி வழியே பாய்ந்த பயணி.. நெட்டிசன்களை உறைய வைக்கும் வீடியோ..!!
டெல்லி சக்தி நகர் வட்டாரப் பகுதியில் இ-ரிக்ஷா ஒன்றின் மீது மோதாமல் இருக்க வளைக்க முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேகன் ஆர் கார் ஒன்று நடுரோட்டில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அதிரடி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பரபரப்பான அந்தச் சாலையில் சென்றுகொண்டிருந்த காரின் ஓட்டுநர், தனக்கு முன்னால் வந்த இ-ரிக்ஷா மீது மோதிவிடக் கூடாது என்பதற்காக வாகனத்தை திடீரென வேகமாகத் திருப்பியுள்ளார். ஆனால், இந்தத் வேகமான திருப்பத்தின் காரணமாகக் காரின் கட்டுப்பாடு முற்றிலுமாக இழக்கப்பட்டு, சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில்பலமாக மோதி கார் தலைகீழாகக் கவிழ்ந்தது.
இந்தக் கொடூரமான மோதலின் தாக்கத்தால், காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் காரின் பின்பக்கக் கண்ணாடி வழியாகத் தூக்கி வீசப்பட்டுச் சாலையில் விழும் நெஞ்சை பதறவைக்கும் காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது. விபத்து நடந்த அடுத்த கணமே, அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தலைகீழாகக் கவிழ்ந்த காரை நிமிர்த்த முயன்றதுடன், காருக்குள் சிக்கியிருந்தவர்களைப் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் சிக்கியவர்களின் தற்போதைய உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.
