“அண்ணன் வைகோ 3 மாதத்தில் தனுஷ் கட்சியில் இருப்பாரு” அவருக்கு இதுதான் வேலை… இப்படியொரு கேவலமான மனுஷனை பார்த்ததே இல்ல… என் சொல்லிவிட்டு அடுத்த நொடியே அந்தர் பல்டி அடித்த திண்டுக்கல் லியோனி…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அண்ணன் வைகோ 3 மாதத்தில் தனுஷ் கட்சியில் இருப்பாரு” அவருக்கு இதுதான் வேலை… இப்படியொரு கேவலமான மனுஷனை பார்த்ததே இல்ல… என் சொல்லிவிட்டு அடுத்த நொடியே அந்தர் பல்டி அடித்த திண்டுக்கல் லியோனி…!!

Published

on

ஆவடியில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அக்கட்சியின் திண்டுக்கல் லியோனி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் தவெக கூட்டணி குறித்து கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடிகர் விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அரசியலில் களமிறங்கப் போவதாக பரவி வரும் தகவல்களின் பின்னணியில் லியோனியின் இந்த பேச்சு புதிய அரசியல் விவாதத்தை உருவாக்கியுள்ளது. தவெக கூட்டணி குறித்துப் பேசிய அவர், கூட்டணி கட்சிகளின் ஆதரவில்தான் விஜய் அரசு தொடர்ந்து வருவதாகவும், அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் விரைவில் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் சூழல் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அரசியல் ரீதியாக வைகோவின் செயல்பாடுகளை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்த லியோனி, “இன்னும் 3 மாதங்களில் தனுஷ் தொடங்கும் புதிய கட்சியில் அண்ணன் வைகோ இருப்பார்” என்று கிண்டலாகக் கணித்துள்ளார். வைகோ தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, “உலகத்திலேயே மிகச்சிறந்த தலைவராக தனுஷை பார்க்கிறேன்” என்று தனுஷைப் பாராட்டிப் பேசுவார் என்றும் அவர் விமர்சித்தார். முன்னதாக, வைகோ எழுதிய புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பங்கேற்க மறுத்ததாகக் குறிப்பிட்ட லியோனி, வைகோ தவெக கூட்டணியில் இணைந்தபோதே அந்த கூட்டணியின் முடிவு தனக்குத் தெரிந்துவிட்டது என்றார்.

Advertisement

மேடையில் வைகோவை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்த லியோனி, அதற்காக உடனடியாக அரங்கத்திலேயே மன்னிப்பும் கோரினார். அதேநேரத்தில் வைகோவின் அசாதாரண பேச்சுத் திறமை மீது தனக்கு எப்போதும் மிகுந்த மரியாதை உண்டு என்றும், தனது வாழ்க்கையில் வைகோவைப் போன்ற சிறந்த பேச்சாளரைத் தான் பார்த்ததே இல்லை என்றும் புகழாரம் சூட்டினார். தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வராத சூழலில், திண்டுக்கல் லியோனியின் இந்த அதிரடி பேச்சு அரசியல் வட்டாரத்தில் தற்போதைய பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in