BREAKING: நாமக்கல்லில் கோர விபத்து..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 மாணவிகள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி… தனியார் கல்லூரி பஸ் மோதி சோகம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: நாமக்கல்லில் கோர விபத்து..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 மாணவிகள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி… தனியார் கல்லூரி பஸ் மோதி சோகம்..!!

Published

on

நாமக்கல் மாவட்டத்தில் நேரிட்ட சோக விபத்தொன்றில் 4 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பள்ளி முடிந்ததும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 மாணவிகள் ஸ்கூட்டரில் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது வழியில் கல்லூரி மாணவி ஒருவரும் அவர்களிடம் லிப்ட் கேட்டுச் சென்றுள்ளார். இவர்கள் நால்வரும் சக்கராம்பாளையம் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் 4 மாணவிகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பள்ளி பயிலும் சிறுவர், சிறுமிகளிடம் இருசக்கர வாகனங்களை ஓட்டத் தருவது மிகவும் ஆபத்தானது என்பதையும், அது அவர்களின் உயிருக்கே உலையாகிவிடும் என்பதையும் இச்சம்பவம் உணர்த்துகிறது. எனவே, பெற்றோர் தங்கள் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வாகனங்கள் தருவதைக் கண்டிப்புடன் தவிர்க்க வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in