மகளிர், முதியோர் கவனத்திற்கு..! உங்க உதவித்தொகை இன்னும் வங்கியில் வரலையா..? அப்போ உடனே இதை பண்ணுங்க! அரசு போட்ட புது ரூல்ஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மகளிர், முதியோர் கவனத்திற்கு..! உங்க உதவித்தொகை இன்னும் வங்கியில் வரலையா..? அப்போ உடனே இதை பண்ணுங்க! அரசு போட்ட புது ரூல்ஸ்..!!

Published

on

இம்மாதம் முதல், அரசு வழங்கி வரும் உதவித்தொகையானது ஆதார் எண் இணைக்கப்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மட்டுமே நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்தத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் மகளிர், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைம்பெண்கள் அனைவரும் தங்களது வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை உடனடியாக இணைக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

வங்கிக் கணக்கில் ஆதாரை இணைப்பதில் ஏதேனும் சிரமங்களோ அல்லது உதவிகளோ தேவைப்பட்டால், பயனாளிகள் அனைவரும் தங்களின் பகுதிக்குட்பட்ட தாலுகா அலுவலகங்களில் உள்ள சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனி வட்டாட்சியர்களை (தனி தாசில்தார்) நேரில் அணுகி பயன்பெறலாம் என அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in