LATEST NEWS
“ஹாஸ்டல் மாணவர்களுக்கு சூப்பர் ஹேப்பி நியூஸ்..” மாதாந்திர உணவுக் கட்டணம் உயர்வுடன் அசத்தல் மெனு.. தமிழக அரசின் அதிரடி அரசாணை..!!
சமூகநீதி மற்றும் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான மாதாந்திர உணவுக் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் படி, பள்ளி மாணவர்களுக்கான உணவுச் செலவு மாதாந்திரத் தொகை ரூ.1,400-லிருந்து ரூ.1,800 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கான மாதாந்திரத் தொகை ரூ.1,500-லிருந்து ரூ.2,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அரசாணை மூலம் தமிழகத்தில் உள்ள பல்வேறு விடுதிகளில் தங்கிப் பயிலும் மொத்தம் 1,16,424 மாணவர்கள் நேரடியாகப் பயனடைவார்கள்.
இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்காக அரசு ரூ.29.41 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், விடுதி மாணவர்களின் உடல் நலனைப் பேணும் வகையில் புதிய உணவு அட்டவணையில் ஆட்டிறைச்சி, கோழிக்கறி, முட்டை, சத்தான பால் மற்றும் கீரை வகைகள் போன்ற பல்வேறு சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
