LATEST NEWS
“ரோஹித்துக்கு கல்தாவா..? BCCI வைத்த சஸ்பென்ஸ் உடைந்தது…! வதந்திகளுக்கு தீனி போட விரும்பல…” தேவஜித் சைகியா அதிரடி விளக்கம்..!!
இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் ரோஹித் சர்மா தொடர்பான ஓய்வு வதந்திகளுக்கு பிசிசிஐ இணைச் செயலாளர் தேவஜித் சைகியா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 2027 உலகக்கோப்பை போட்டியில் விளையாட ரோஹித் சர்மா விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், அவரை ஓய்வு பெற வைக்கும் நோக்கில் பிசிசிஐ செயல்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. மேலும், இங்கிலாந்து தொடருடன் அவர் தனது ஓய்வை அறிவிப்பார் என்றும் பேசப்பட்டது.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய தேவஜித் சைகியா, ரோஹித்தின் ஓபனிங் ஸ்லாட்டுக்கு எந்தவொரு உடனடி ஆபத்தும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். களத்தில் ரோஹித் தொடர்ந்து அற்புதமாக விளையாடி வருவதை அனைவரும் பார்த்து வருவதாகவும், எனவே இதுபோன்று பரவி வரும் வீண் வதந்திகளுக்குத் தீனி போட பிசிசிஐ விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
