LATEST NEWS
பைபிள் வசனங்களின்படி நடந்ததால்தான்… தமிழகத்தில் தவெக ஆட்சி.. சபாநாயரின் சர்ச்சை பேச்சு.. கொந்தளிக்கும் தமிழக அரசியல்…!!
தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் மற்றும் நிதி அமைச்சர் என். மேரி வில்சன் ஆகியோர் அண்மைக் காலமாக ஆன்மீகம் மற்றும் மொழி சார்ந்த விவகாரங்களில் வெளிப்படுத்திய கருத்துகள் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் தவெக அரசின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசுகையில், “பைபிள் வசனங்களின்படி நடந்ததால்தான் தமிழகத்தில் ஊழல் இல்லாத சிறப்பான தவெக ஆட்சி அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, சட்டசபையில் பட்ஜெட் உரையின் போது தனது தமிழ் உச்சரிப்பு குறித்து எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த நிதியமைச்சர் மேரி வில்சன், “கிறிஸ்தவம் தனக்கு அன்பின் மொழியைக் கற்றுக்கொடுத்துள்ளது என்றும், எவ்வளவுதான் தமிழ் படித்தாலும் சிலரால் இந்த அன்பைப் புரிந்துகொள்ள முடியாது” என்றும் கூறியது தமிழ் மொழியை அவமதிப்பதாகக் கூறி பாஜகா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனத்திற்கு உள்ளானது.
