LATEST NEWS
“ஐயா கே.என் நேருவுக்கு உடம்பு சரியில்ல” நீங்கதான் ஜாக்கிரதையா இருக்கணும்.. சட்டென உதயநிதியை அலர்ட் செய்த சபாநாயகர்… சட்டசபையைத் தொற்றிய ஜலதோஷம்…!!
தமிழ்நாடு சட்டசபையில் இன்று அமைச்சர் கே.என்.நேருவின் உடல்நிலையைக் குறிப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு, அவையில் பெரும் கலகலப்பை ஏற்படுத்தியது. தன் அருகில் அமர்ந்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவிற்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவருக்கு ஜலதோஷம் பிடித்திருக்கிறது என்றும் உதயநிதி ஸ்டாலின் அவையின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
இதைக் கேட்ட சபாநாயகர் அப்பாவு, உதயநிதி ஸ்டாலினைப் பார்த்து, “அவருக்கு ஜலதோஷம் இருந்தால், அருகில் அமர்ந்திருக்கும் நீங்கதான் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். சபாநாயகரின் இந்த உடனடி மைண்ட் வாய்ஸ் மற்றும் கலகலப்பான எச்சரிக்கையால், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பலத்த சிரிப்பொலி எழுப்ப, அவையே சில நிமிடங்கள் சிரிப்பலையில் மூழ்கியது.
