LATEST NEWS
மகன் கம்பெனிக்கு பர்மிஷன் தராத ஆத்திரமா..? 1500 கோடி லஞ்சம் வாங்குனேனா..? அப்பாவுவின் பகீர் புகாரின் பின்னணியைப் போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்..!!
தமிழக மின்சாரத் துறை தனியார்மயமாக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு நடுவே, திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் சபாநாயகருமான மு. அப்பாவு மற்றும் தவெகவைச் சேர்ந்த மின்சாரத் துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் இடையே மிகக் கடுமையான வார்த்தை மோதல் வெடித்துள்ளது. தற்போதைய அரசு செயற்கையான மின் தட்டுப்பாட்டை உருவாக்கி, மின்சார வாரியத்தை அதானி குழுமத்திற்குத் தாரைவார்க்க முயல்வதாக அப்பாவு பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார். அத்துடன், மின் கட்டண உயர்வுத் திட்டங்களின் பின்னணியில் அமைச்சர் நிர்மல் குமார் ஒரு “பாஜக மந்திரி” போலச் செயல்படுகிறார் என்றும் அவர் விமர்சித்தார்.
இந்தக் குற்றச்சாட்டுக்குத் தான் 1500 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக அப்பாவு மறைமுகமாகக் குறிப்பிடுகிறாரா என்ற கேள்வியை எழுப்பி, அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் மிக ஆவேசமாகவும் நெத்தியடியாகவும் பதில் அளித்துள்ளார். அப்பாவுவின் இந்த விரக்தியான பேச்சுக்குக் காரணம் மக்கள் நலன் அல்ல, அவருடைய சொந்தக் குடும்பப் பின்னணிதான் என்று அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் போட்டு உடைத்துள்ளார்.
அமைச்சர் நிர்மல் குமார் தனது பதிலடியில், “அப்பாவு குறிப்பிடும் அந்தப் புகார்கள் யாவும் அவரது மகன் சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு சாதகமாக அனுமதி பெற அவர் பல வழிகளில் முயன்று தோற்றுப்போனதன் வெளிப்பாடுதான்” என்று சாடினார். அரசின் விதிகளுக்கு முரணாக இருந்ததால் அந்த நிறுவனத்திற்குத் தங்களால் அனுமதி கொடுக்க முடியாது என்று கறாராக மறுத்துவிட்டதாகவும், அந்த ஆத்திரத்திலும் ஏமாற்றத்திலும்தான் அப்பாவு தற்போது இதுபோன்ற ஆதாரமற்ற அவதூறுகளைத் தன் மீது அள்ளி வீசி வருவதாகவும் அமைச்சர் மிகத் தீவிரமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.
