LATEST NEWS
“அப்போ படுத்துக்கிட்டும் போத்திக்கலாம்… போத்திக்கிட்டும் படுத்துக்கலாம்” அந்த முடிவுக்கு வந்துடீங்க போல… சபாநாயகரை பங்கமாக கலாய்த்த அமைச்சர் தங்கம் தென்னரசு..!!
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அமைச்சர்களின் அறிவிப்புகள் தொடர்பாக காரசாரமான விவாதம் நடைபெற்றபோது, அது திடீரென சுவாரசியமான ஒரு சினிமா கிளைமாக்ஸ் விவாதமாக மாறியது. அவையில் பேசிய திமுகவின் உதயநிதி ஸ்டாலின், “படம் நல்லா இருந்தா CLIMAX வரை இருந்து மக்கள் பார்ப்பாங்க” எனச் சிரித்தபடி எதிர்க்கட்சியினரைக் கலாய்த்தார். இதற்கு உடனடியாகப் பதிலடி கொடுத்த தமிழக வெற்றிக் கழக அமைச்சர் வன்னியரசு, “இந்த திராவிட மாடல் படத்துல மொத்தம் 2 CLIMAX இருக்கு” எனக் கூறி உதயநிதியின் விமர்சனத்தை முறியடித்தார்.
இதனைத் தொடர்ந்து விவாதத்தில் குறுக்கிட்டுப் பேசிய திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு, திரைப்படங்களின் தன்மையை விளக்கிப் பேசினார். “படத்துல CLIMAX கடைசியா தான் வரும்..! ஆனால் தியேட்டரில் முதல்லயே CLIMAX-ஐ போட்டுட்டு, படத்தை அப்புறம் போட முடியுமா..? அது சரியா இருக்குமா..?” என்று சபாநாயகரை நோக்கிக் கேள்வி எழுப்பினார். அப்போது சபாநாயகர் அதற்குச் சட்டென ஒரு சாதுரியமான பதிலைக் கொடுக்க, அதைக் கேட்டு அவையிலிருந்த தவெக எம்.எல்.ஏக்கள் அனைவரும் மிகுந்த குஷியில் மேஜையைத் தட்டி துள்ளிக் குதித்துத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சபாநாயகரின் அந்த நக்கல் பதிலைக் கேட்டுச் சிரித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரை மேலும் வம்புக்கு இழுக்கும் வகையில் நகைச்சுவையாகக் கலாய்த்தார். “அப்போ படுத்துக்கிட்டும் போத்திக்கலாம்.. போத்திக்கிட்டும் படுத்துக்கலாம் என்ற முடிவுக்கு நீங்க வந்துவிட்டீர்கள் போல” என்று சபாநாயகரைப் பார்த்து அவர் கூற, ஒட்டுமொத்த சட்டமன்ற வளாகமும் சிரிப்பலையிலும் கலகலப்பான சூழலிலும் மூழ்கியது.
