ரொம்ப கத்தாதீங்க..! 75 வருஷமா தலித் மக்களுக்காக என்ன செஞ்சீங்க.? அவங்க இன்னும் குடிசையில் தான இருக்காங்க… “காலணி” என்ற பெயரை மாத்தியதன் உள்நோக்கம் என்ன..? திமுகவை விளாசிய ஆதவ் அர்ஜுனா…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரொம்ப கத்தாதீங்க..! 75 வருஷமா தலித் மக்களுக்காக என்ன செஞ்சீங்க.? அவங்க இன்னும் குடிசையில் தான இருக்காங்க… “காலணி” என்ற பெயரை மாத்தியதன் உள்நோக்கம் என்ன..? திமுகவை விளாசிய ஆதவ் அர்ஜுனா…!!

Published

on

தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழக வெற்றிக் கழக அமைச்சரான ஆதவ் அர்ஜுனா மற்றும் எதிர்க்கட்சியான திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடையே தலித் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் “காலணி” என்ற பெயர் மாற்றம் தொடர்பாக மிகக் கடுமையான விவாதமும் வாக்குவாதமும் வெடித்தது. சட்டமன்றத்தில் தலித் மக்களின் நலன் குறித்து விவாதம் எழுந்தபோது, திராவிட மாடல் ஆட்சியில் தலித் மக்களின் நிலையை சுட்டிக்காட்டிப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுகவினரின் கூச்சல்களுக்கு அஞ்சாமல் மிக ஆக்ரோஷமாகத் தனது கருத்துகளைப் பதிவு செய்தார்.

விவாதத்தின் போது திமுகவினரைப் பார்த்துப் பாய்ந்த ஆதவ் அர்ஜுனா, “காலணி என்ற பெயரை மாத்திட்டீங்க, அப்போ உங்க உள்நோக்கம் என்ன?” எனக் கேள்வி எழுப்பினார். மேலும், திமுக உறுப்பினர்கள் அவையில் எழுந்து நின்று கூச்சலிட்டுக் குறுக்கீடு செய்தபோது, “இந்த சவுண்டுலாம் இங்க விட வேண்டாம்..! நீங்க கத்தினால் பயந்துடுவோமா..? எந்திரிச்சு நின்னிங்கனா நாங்களும் எழுந்து நிற்போம் பார்த்துக்கோங்க..!” என்று மிக ஆவேசமாக எச்சரித்தார். தங்களின் குரலை ஒடுக்க நினைத்தால், தவெகவினரும் சம பலத்துடன் சட்டசபையில் எழுந்து நின்று பதிலடி கொடுக்கத் தயங்க மாட்டார்கள் என்பதை அவர் மிகத் தெளிவாக உணர்த்தினார்.

Advertisement

தொடர்ந்து தலித் மக்களின் சமூகப் பொருளாதார நிலை குறித்து திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்த அவர், “தலித் மக்களுக்காக 75 வருஷமா என்ன செய்தீர்கள்..? அவர்கள் இன்னும் அதே குடிசையில் தான் இருக்காங்க” என்று நேரடியாகக் குற்றம் சாட்டினார். தலித் மக்கள் இன்னும் அடிப்படை வசதிகளின்றி அதே ஏழ்மை நிலையிலேயே தொடர்வதை சுட்டிக்காட்டி அவர் எழுப்பிய சரமாரி கேள்விகளால் அவையில் கடும் சலசலப்பு ஏற்பட்டது. ஆதவ் அர்ஜுனாவின் இந்த அதிரடிப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் தொடர்ந்து முழக்கமிட்டதால், சட்டமன்ற வளாகமே சில நிமிடங்கள் பெரும் கூச்சல் குழப்பத்துடன் பதற்றமாகக் காட்சியளித்தது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in