இவரு அமைச்சரா இருந்தப்போ விவசாயிகளை குண்டர் சட்டத்துல கைது பண்ணுனவரு தானே.. இப்போ போராளி மாதிரி பேசுறாரு… எ.வ வேலுவை கடுமையாக விமர்சித்த ஆதவ் அர்ஜுனா..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இவரு அமைச்சரா இருந்தப்போ விவசாயிகளை குண்டர் சட்டத்துல கைது பண்ணுனவரு தானே.. இப்போ போராளி மாதிரி பேசுறாரு… எ.வ வேலுவை கடுமையாக விமர்சித்த ஆதவ் அர்ஜுனா..!!

Published

on

2026 தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம் தொடர்பாக தவெக மற்றும் திமுக இடையே காரசாரமான விவாதம் அரங்கேறியுள்ளது. திமுகவின் முன்னாள் அமைச்சரான எ.வ.வேலு, தவெகவின் தேர்தல் வாக்குறுதியைச் சுட்டிக்காட்டிச் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். 5 ஏக்கருக்குக் குறையாத நிலம் வைத்துள்ள விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் எனத் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த தவெக அரசு, அதனை எப்போது நிறைவேற்றப் போகிறது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எ.வ.வேலுவின் இந்தக் கேள்விக்குத் தவெக தரப்பில் தற்போதைய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உடனடியாகப் பதிலடி கொடுத்துப் பேசியுள்ளார். தவெகவின் தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் தங்களின் ஆட்சியில் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று அவர் சபையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Advertisement

தொடர்ந்து திமுகவை விமர்சித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது விவசாயிகளைக் குண்டர் சட்டத்தில் கைது செய்யக் காரணமாக இருந்தவர், இன்று ஏதோ விவசாயிகளுக்கான போராளி போலச் சட்டமன்றத்தில் பேசுகிறார் என எ.வ.வேலுவை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். இந்த விவகாரம் அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in