LATEST NEWS
பெரும் பதற்றம்..! நாஞ்சில் சம்பத் மீது திமுகவினர் நாற்காலிகளை வீசி தாக்குதல்… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!
சென்னையில் நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்றில், திமுகவினரை இழிவாகப் பேசியதாகக் கூறி நாஞ்சில் சம்பத் மீது திமுகவினர் நாற்காலிகளை வீசித் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவாதத்தின் போது நாஞ்சில் சம்பத் தெரிவித்த கடுமையான விமர்சனங்களால் ஆத்திரமடைந்த திமுகவினர், திடீரென மேடையை நோக்கி அவரை அடிக்கப் பாய்ந்தனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பவுன்சர்கள் உடனடியாகத் தடுத்து நிறுத்திய போதிலும், கூட்டத்தில் இருந்தவர்கள் நாற்காலிகளை வீசித் தாக்குதல் நடத்தியதால் நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்த மோதல் சம்பவத்தால் விவாதக் அரங்கம் முழுவதும் போர்க்களமாக மாறியதோடு, அங்கு பெரும் பதற்றமும் நிலவியது. தமிழக அரசியலில் தவெக மற்றும் திமுக இடையே வார்த்தைப்போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள இந்தச் சூழலில், அரசியல் மேடைகளில் புகழ்பெற்ற பேச்சாளரான நாஞ்சில் சம்பத் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
