LATEST NEWS
ED போட்ட போடு… PA வீட்டில் சிக்கிய 32 லட்சம் ரொக்கம்…! அதிரடியாக ராஜினாமா செய்த மூத்த காங்கிரஸ் தலைவர்..!!
உத்தரகாண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத் ஆவார். இவர் ஏற்கனவே உத்தரகாண்ட் மாநில முதல்வராக இருந்துள்ளார். இவரின் 2014 முதல் 2017-ம் ஆண்டு வரையிலான முதல்வர் பதவி காலத்தில், சிறப்புப்பணி அதிகாரியாக செயல்பட்டவர் சந்தன் சிங் ஜீனா. தற்போது இவர் ஹரிஷ் ராவத்தின் தனிப்பட்ட உதவியாளராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், இவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, கணக்கில் வராத 32 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 12-க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த கடிகாரங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
தனது தனிப்பட்ட உதவியாளர் வீட்டில் இருந்து பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவரான ஹரிஷ் ராவத், காங்கிரஸ் கட்சியில் தான் வகித்து வந்த அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
